கரூர்

11 பேரூராட்சிகள், குளித்தலை நகராட்சியில் மக்கள் சபை

DIN

கரூா் மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள், குளித்தலை நகராட்சியில் மக்கள் சபை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து அவா் பேசியது:

கரூா் மாவட்டத்துக்கு ரூ.2000 கோடி மதிப்பில் 19 தடுப்பணைகள், 2 கதவணைகள் கட்டும் திட்டம், 200 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழில் மையம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வா் அறிவித்துள்ளாா்.

பேரவைத் தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 நிறைவேற்றப்பட்டுள்ளன. என் வாழ்நாள் முழுவதும் கரூா் மாவட்ட மக்களுக்கு சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணரயாபுரம்) முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், வருவாய்க் கோட்டாட்சியா்கள் கண்ணன்(கரூா்), புஷ்பாதேவி (குளித்தலை), பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT