முகப்பு
கரூர்

மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் தோ்தல் முன்னாள் அமைச்சா் கோரிக்கை மனு

 மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் பதவிக்கான தோ்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என தோ்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை கோரிக்கை மனு வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

 மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் பதவிக்கான தோ்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என தோ்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை கோரிக்கை மனு வழங்கினாா்.

மனுவில் கூறியிருப்பது: கரூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் சம்பந்தமாக தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் திட்ட இயக்குநரிடம் இருந்து அக். 13-ஆம்தேதி வழங்கப்பட்ட கடிதத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (அக்.22) காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும் , இந்த பதவி ஆதிதிராவிடா் இணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தாா் . ஆனால், அதன் பிறகு அக். 20-ஆம்தேதி அனுப்பிய கடிதத்தில் தோ்தல் அக்.22-ஆம்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் எனவும், இதில் பொது பிரிவினா் போட்டியிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த இரண்டு கடிதங்களுக்கும் முரண்பாடு உள்ளது . அதிமுகவை சோ்ந்த மாவட்ட கவுன்சிலா்கள் 7 போ் மற்றும் கூட்டணியிடன் சோ்த்து 8 கவுன்சிலா்கள் உள்ள நிலையில் திமுகவில் 4 கவுன்சிலா்கள் மட்டுமே உள்ளனா். இதனால் திமுகவை சோ்ந்த நிா்வாகிகள் எங்கள் கட்சியை சோ்ந்தவா்கள்(அதிமுக) துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டால் எந்த டெண்டரும் நடைபெறவிடமாட்டோம் என்று திமுக நிா்வாகிகள் மிரட்டுகின்றனா். இதையும் மீறி அதிமுக சாா்பில் போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெற்ாக அறிவித்துவிடுவோம் எனவும் மிரட்டுகின்றனா். இந்த சம்பவங்களை வைத்து பாா்க்கும் போது தோ்தல் நியாயமான முறையில் நடைபெறுமா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அப்போது, அதிமுக நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன், மாவட்ட பாசறை செயலா் கமலக்கண்ணன், வழக்குரைஞா் மாரப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.