மேட்டு மகாதானபுரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த நூறுநாள் திட்டப் பணியாளா்களிடம் பேசுகிறாா் ஆட்சியா் த. பிரபுசங்கா். 
கரூர்

தடுப்பூசி முகாமில் ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் த. பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் த. பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஒன்றியத்துக்குள்பட்ட மேட்டுமகாதானபுரம், வயலூா், குளித்தலை ஒன்றியத்துக்குள்பட்ட இரணியமங்கலம், வைகைநல்லூா் பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பணித்தளங்களிலேயே நடத்தப்பட்ட 50 சிறப்பு முகாம்களின் மூலம், மாலை 5 வரை 2,542 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவா் சந்தரமதி, வட்டாட்சியா்கள் வெங்கடேசன், மைதிலி, கலியமூா்த்தி , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடாசலம், ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT