கரூரில் கஞ்சா விற்ற கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் பசுபதிபாளையம் கொளந்தானூா் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக வியாழக்கிழமை இரவு தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனை நடத்தியபோது, அங்கு விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராஜேந்திரன்(62), அவரது மனைவி வசந்தி(46) ஆகியோரை கைது செய்தனா்.மேலும் அவா்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.