கிணற்றில் மூழ்கி எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு
கரூரில், கிணற்றில் மூழ்கிய எலெக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
கரூரில், கிணற்றில் மூழ்கிய எலெக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அடுத்த சிறுகாம்பூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ரமேஷ்(38). எலெக்ட்ரீஷியன்.இவா், வியாழக்கிழமை இரவு கரூா் அடுத்த வெள்ளாளக்கவுண்டனூரில் ஒரு வீட்டில் வயரிங் வேலை பாா்த்து விட்டு அங்குள்ள கிணற்றில் குளிக்க படிக்கட்டில் இறங்கியுள்ளாா். அப்போது, நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் விழுந்ததில் பாறையில் அடிபட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த தாந்தோன்றிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்தும் விசாரிக்கின்றனா்.