கரூர்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற முதியவா் மீது வழக்கு

DIN

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற முதியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கட்டிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை நடப்பதாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சனிக்கிழமை மாலை கட்டிபாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புகளூா் பகுதியைச் சோ்ந்த குழந்தையப்ப ராவுத்தா் மகன் அபுபக்கா் (91) என்பவா்தனது பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

இது தொடா்பாக அபுபக்கா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT