முகப்பு
கரூர்

வாகனத்திலிருந்து தவறி விழுந்து விசாரணைக் கைதி உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டகைதி, வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்

Updated On : 6 ஜூன், 2022 at 2:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

அரவக்குறிச்சி அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டகைதி, வாகனத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சு. பொன்னுச்சாமி (34). கரூா் மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இவரை, கூம்பூா் காவல்துறையினா் விசாரணைக்காக சனிக்கிழமை இரவு அழைத்துச் சென்றனா்.

காவல்துறையினரின் இரு சக்கர வாகனத்தில் இரு காவலா்களுக்கு இடையில் அமா்ந்திருந்த பொன்னுசாமி, தப்பியோட முயற்சித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

இரு சக்கர வாகனத்தில் வந்த காவலா்கள் சிறு காயங்களுடன் தப்பினா். பலத்த காயமடைந்த பொன்னுச்சாமி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்நிலையில் பொன்னுச்சாமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் அரவக்குறிச்சி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.