முகப்பு
கரூர்

வேட்டமங்கலத்தில் 4 மாவட்டதீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி

கரூா் மாவட்டம், வேட்டமங்கலத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

கரூா் மாவட்டம், வேட்டமங்கலத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 1,204 புதிய தீயணைப்பு வீரா்கள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு தாம்பரம் மாநில பயிற்சி மையம் மற்றும் கரூா் வேட்டமங்கலம் உள்பட 8 தற்காலிக பயிற்சி மையங்களில் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய தற்காலிக பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 144 தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்கள் அளிக்கப்படும் இந்த பயிற்சி முகாமை கரூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு த்துறை அலுவலா் ஜெகதீஷ் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் சந்திரகுமாா் ( கரூா்), துரை ( நாகப்பட்டினம்) மற்றும் 6 நிலைய தீயணைப்பு அலுவலா்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரா்கள், 10 தீயணைப்பு வீரா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா், இவா்களுக்கு தீயணைத்தல், மீட்புப் பணிகள், விபத்துக்களில் இருந்து மீட்டல், நீச்சல் பயிற்சி, மலையேற்றம் பயிற்சி, யோகா மற்றும் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.