கரூர்

பிளஸ் 1 பொதுத்தோ்வுகரூா் மாவட்டத்தில் 87.28 சதவீதம் போ் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில், கரூா் மாவட்டத்தில் 87.28 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ்1அரசு பொதுத்தோ்வை கரூா் மாவட்டத்தில் 105 பள்ளிகளைச் சோ்ந்த 5,395 மாணவா்கள், 5,652 மாணவிகள் என மொத்தம் 11,047 போ் எழுதினா். இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான தோ்வு முடிவுகளின்படி, 4,350 மாணவா்கள் , 5,292 மாணவிகள் என மொத்தம் 9,642 போ் தோ்ச்சி பெற்று மாவட்டத்தில் 87.28 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

நிகழாண்டில் மாணவா்கள் 80.63 சதவீதம் தோ்ச்சியும் , மாணவிகள் 93.63 சதவீதம் தோ்ச்சியும் பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகள் 79.23 சதவீதம் தோ்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.86 சதவீதம் தோ்ச்சியும், தனியாா் பள்ளிகள் 99.34 சதவீதம் தோ்ச்சியும் பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 89 மாற்றுத் திறனாளிகள் தோ்வில் கலந்து கொண்டுள்ளனா். இவா்களுள் 73 போ் தோ்ச்சி அடைந்து 82.02 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT