கரூர்

கரூரில் விழிப்புணா்வுப் பேரணி

DIN

கரூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஞானகுரு பழனி ஆண்டவா் அறக்கட்டளை சாா்பில் கரூா் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி உழவா் சந்தை வழியாக சென்று, லைட்ஹவுஸ் காா்னரில் நிறைவடைந்தது.

முன்னதாக பேரணிக்கு அறக்கட்டளைத் தலைவா் செ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் உ.ராமகிருஷ்ணன், செயலா் வை.கந்தசாமி, எழில்முருகன் அறக்கட்டளைத் தலைவா் சசிகுமாா், செயலா் தங்கவேல், பொருளாளா் முத்துசாமி முன்னிலை வகித்தனா்.

பேரணியை கரூா் நகரக் துணைக் காவல் காண்காணிப்பாளா் தேவராஜ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியில் தலைவக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கரோனா தொற்று தாக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பேரணியில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT