மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்குளம் அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சாா்பில் நான்கு குறுவட்ட அளவிலான கபடி போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். கடவூா் வட்டம், மத்தகிரி ஊராட்சிக்குள்பட்ட செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினா்.
இதையடுத்து வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித்தலைமை ஆசிரியை(பொறுப்பு) இலக்கியா தலைமை வகித்து, மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில், மத்தகிரி ஊராட்சி மன்றத் தலைவா் தங்கராசு, தமிழாசிரியா் புலவா் கருப்பண்ணன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.