கரூர்

கரூரில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 74 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகள் 74 பேருக்கு ரூ.88.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

கரூா்: கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகள் 74 பேருக்கு ரூ.88.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,044 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து கூட்டத்தில் தாட்கோ நிதியுதவி திட்டத்தின் கீழ் தொழில்முனைவோா்கள் 30 பேருக்கு ரூ.74 லட்சத்து 26 ஆயிரத்து 487 மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவி உள்பட 74 பேருக்கு ரூ.88.95 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT