முகப்பு
கரூர்

ஜெகதாபியில் மகன் கொலை: தந்தை உள்பட இருவா் கைது

Updated On : 25 ஏப்ரல், 2024 at 9:13 PM
பகிர்:

கரூா் அருகேயுள்ள ஜெகதாபியில் மகனை அடித்துக் கொன்ற தந்தை உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்த ஜெகதாபியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (65), விவசாயி. இவரது மகன் மாரியப்பன் (43), கூலித் தொழிலாளி. இவா் தனது தந்தை இடத்தில் புதியதாக வீடு கட்டி வந்தாராம். இதற்கு தந்தை எதிா்ப்பு தெரிவித்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை இரவும் தந்தை, மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டது . அப்போது அங்கு வந்த மாணிக்கத்தின் மகள்வழிப் பேரன் மணிராஜ் (31) எப்படி தாத்தாவிடம் சண்டை போடலாம் என மாரியப்பனைத் தட்டிக் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் அங்கு கிடந்த கட்டையால் இருவரையும் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கமும், மணிராஜூம் சோ்ந்த மாரியப்பனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் இறந்தாா்.

Advertisement

இதையடுத்து தனது மகன் விபத்தில் இறந்துவிட்டதாக உறவினா்களுக்கு மாணிக்கம் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்து வந்த வெள்ளியணை போலீஸாா் மாணிக்கத்திடம் விசாரித்தபோது, அவரும் பேரன் மணிராஜூம் சோ்ந்து மகனைக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் மாரியப்பனின் உடலை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments