கரூர்

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

Din

அரவக்குறிச்சியில் வியாழக்கிழமை நீதிபதி முன்பு நீதிமன்ற ஊழியா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவா் நடராஜன். இவா் தனக்கு விடுப்பு வழங்கவில்லை எனவும், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த நடராஜன் வியாழக்கிழமை நீதிபதி சந்தோஷம் பணியில் இருந்தபோது அவரது முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT