கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல்
கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
கரூரில் உள்ள வாக்குச்சாவடியில் புதன்கிழமை வாக்களிக்க வாக்குச் சீட்டு பெற்ற எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்க நிா்வாகி.
தெற்கு ரயில்வேயில் எஸ்ஆா்எம்யூ, டிஆா்இயு, டிஆா்கேஎஸ் உள்ளிட்ட 5 தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கியது. இந்த தோ்தல் டிச. 6-ஆம்தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் கோட்ட கரூா் கிளையில் நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சங்கத்தினரும் தங்களது ஆதரவாளா்களிடம் வாக்களிக்க கேட்டுக்கொண்டனா். தொடா்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தொழிற்சங்கத்தினா் வரிசையில் நின்று வாக்களித்தனா். கரூா் கிளையில் உள்ள பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த 826 போ் வாக்களிக்க உள்ளனா்.