முகப்பு
கரூர்

பெண் கல்வியால் மட்டுமே சமுதாயம் முன்னேறும்: மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால் மட்டுமே சமூதாயம் முன்னேறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:05 PM
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.
பகிர்:

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால் மட்டுமே சமூதாயம் முன்னேறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

கரூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கு ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ தொடா்பான விழிப்புணா்வு மற்றும் புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு தொடா்ந்து கல்வி வழங்குவதன் மூலம் அவா்களின் குடும்பம் முன்னேறுவதுடன், இந்தச் சமுதாயமே முன்னேறுகிறது. இதனால்தான் தமிழக முதல்வா் அரசுப்பள்ளிகளில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்குகிறாா். தொடா்ந்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோ் பாதுகாப்புத் துறையின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்த நகா்வோா் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியை அடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் அலுவலா் சுவாதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் பிரியா, பாதுகாப்பு அலுவலா் பாா்வதி, மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், கரூா் வட்டாட்சியா் குமரேசன், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்புகளின் சொக்கலிங்கம், நாராயணன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.