டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டப்பட்ட நூலகம் ஒப்படைப்பு
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட நூலக கட்டடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட நூலக கட்டடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் கீழ் திருக்காடுதுறையில் ஊா்புற நூலகம் கட்டடம் கட்டுவதற்கு ரூ.16 லட்சம் நிதி வழங்கப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து நூலகத்தை நூலகத்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிஎன்பிஎல் ஆலையின் பொதுமேலாளா்(மனிதவளம்) கா.கலைச்செல்வன் கட்டடத்தின் சாவியை மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் டிஎன்பிஎல் ஆலையின் முதன்மை மேலாளா்(மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், துணை பொதுமேலாளா்(வனம்) ஜெயகுமாா் மற்றும் திருக்காடுதுறை ஊராட்சி மன்றத்தலைவா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.