முகப்பு
கரூர்

தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமிகோயிலில் முடிகாணிக்கை மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமிகோயிலில் முடிகாணிக்கை மண்டபம்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:09 PM
வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை திறக்கப்பட்ட முடிகாணிக்கை மண்டபத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
பகிர்:

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் ரூ.2.09 கோடியில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபத்தை காணொலியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை திறந்து வைத்தாா்.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.2.09 கோடி மதிப்பில் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடந்து, கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் குத்துவிளக்கேற்றிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கரூா் மாநகராட்சி மேயா் வெ.கவிதா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், துணை மேயா் தாரணி சரவணன், உதவி காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் மற்றும் செயல் அலுவலா் இரா.இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.