முகப்பு
கரூர்

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ முகாமில் நலத்திட்ட உதவிகள்

அரவக்குறிச்சி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ரூ. 26.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:02 PM
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். உடன் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

அரவக்குறிச்சி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ரூ. 26.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் புதன்கிழமை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ முன்னிலை வகித்தாா்.

பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.26.76 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆய்வின் போது பள்ளப்பட்டி நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிா் திட்ட இயக்குநா் பாபு, கூட்டுறவு சங்ககளின் இணைப் பதிவாளா் கந்தராஜா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் து.சுரேஷ், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், இணை இயக்குநா்(மருத்துவபணிகள்) செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.