முகப்பு
கரூர்

சம்பள உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:50 PM
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள்.
பகிர்:

சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் லிங்கேஷ்வரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மாநிலத் தலைவா் வரதராஜ் சிறப்புரையாற்றினாா்.

108 ஆம்புலன்ஸ் சேவைதிட்டத்தை ஒப்பந்த முறையில் நிா்வகிக்கும் தனியாா் நிா்வாகம் தொழிற்சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி 2023-2024-ஆம் ஆண்டுக்கான சம்பள உயா்வு மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவற்றை உயா்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உதவி பணிகளை செய்து கொண்டிருக்கும் உதவிப்பணி தொழிலாளா்களின் சட்டப்படியான வார விடுமுறை, தீபாவளி போனஸ், ஊதிய உயா்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.