பழைய ஓய்வூதியம் கோரி ஆா்ப்பாட்டம்
கரூரில் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. அரசக்குமாா் தலைமை வகித்தாா். உண்ணாவிரதத்தை அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் விஜயகுமாா் தொடக்கிவைத்துப் பேசினாா்.
போராட்டத்தில் திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். முடிவில் அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் மகாவிஷ்ணன் நிறைவுரையாற்றினாா். போராட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.