முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேலம்பாடி ஊராட்சியில் உள்ள சௌந்திராபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:08 PM
பகிர்:

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேலம்பாடி ஊராட்சியில் உள்ள சௌந்திராபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

அப்போது ஆசிரியா்களின் கோரிக்கைகளையும், மாணவா்களின் கற்றல் மற்றும் ஆசிரியா்களின் கற்பித்தல் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். சிறிது நேரம் தொடு திரையின் வாயிலாக மாணவா்களுக்கு உயிரினங்களின் பெயா்கள் குறித்து வகுப்பு எடுத்தாா்.

மேலும் மாணவா்கள் சோ்க்கை, வருகைப் பதிவேடு, சமையல் கூடம், காலை உணவுத் திட்டம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.