அரவக்குறிச்சி அருகே கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம்
அரவக்குறிச்சி அருகே கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே உள்ள அஞ்சா கவுண்டன்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைக்க பண்ணப்பட்டி பகுதியில் உள்ள தனியா கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணன் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நடத்திய இந்த கூட்டத்தில் கரூா் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (பொறுப்பு) பொறியாளா் ஜெயராஜ் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பண்ணப்பட்டி மற்றும் எருமாா்ப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கல்குவாரி அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என கருத்து தெரிவித்தனா். அதே சமயம் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கரூா் மாவட்டத்தில் அதிகப்படியான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இதனால் கல்குவாரிகளில் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருவதால் இந்த குவாரி அமைக்க அனுமதி தரக்கூடாது என கருத்துக்களை பதிவு செய்தனா். பதிவு செய்யப்பட்ட இருதரப்பு கருத்துக்களையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.