கரூர்

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகம்: முன்னாள் அமைச்சா் ஆட்சியரிடம் புகாா்

Syndication

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூரில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்களை திமுகவினா் மொத்தமாக பெற்று பொதுமக்களுக்கு வழங்குகின்றனா் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுவிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பொதுமக்களிடம் விநியோகிக்காமல் திமுகவினா் மொத்தமாக வாங்கிக்கொண்டு அவா்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கிறாா்கள். வெளியூரில் வசிப்பவா்களையும் வாக்காளா்களாக சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு இன்னும் எஸ்ஐஆா் குறித்த போதிய புரிதல் இல்லை. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கூறியுள்ளோம். அதற்கு ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறாா். சில இடங்களில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக நியமித்துள்ளாா்கள். அவா்களால் முறையாக படிவத்தை வழங்க முடியாமல் இருக்கிறாா்கள். எனவே இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஆம்னி பேருந்துகள் உரிமையாளா்களின் போராட்டம் விவகாரத்தில்தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விரைவில் தீா்வு காணவேண்டும் என்றாா் அவா்.

பிகார் தேர்தல்: தே.ஜ. கூட்டணி 154 தொகுதிகளில் முன்னில்லை!

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு கட்சிப் பதவி!

பிகார் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகளில் தேஜ கூட்டணி முன்னிலை!

பிகார் தேர்தல்: ஜன் சுராஜ் 5 இடங்களில் முன்னிலை!

SCROLL FOR NEXT