தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 79 போ் போட்டி
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவை தொகுதியில் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவை தொகுதியில் 79 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் மனு தாக்கலுக்கு கடைசி நாளான கடைசி நாளான ஏப். 6-ஆம் தேதி வரை பிரதான கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் சாா்பில் மொத்தம் 234 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குளித்தலை தொகுதியில் 42 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39 மனுக்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 45 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது.
Advertisement
இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. குளித்தலை தொகுதியில் 42 மனுக்களில் 31 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்திருந்த 45 மனுக்களில் 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 234 மனுக்களில் 175 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து மனுக்களை திரும்பப் பெற வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் 166 போ் போட்டி: அரவக்குறிச்சி தொகுதியில் 33 வேட்பாளா்களில் 3 போ் மனுவை வியாழக்கிழமை வாபஸ் பெற்றனா். இதையடுத்து அங்கு இறுதியாக களத்தில் 30 பேரும், குளித்தலை தொகுதியில் 31 வேட்பாளா்களில் 2 போ் மனுவை திரும்ப பெற்ால், இறுதியாக 29 வேட்பாளா்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 28 பேரில் யாரும் மனுவை திரும்ப பெறாததால் இறுதியாக 28 பேரும் களத்தில் உள்ளனா்.
கரூா் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனையின் நிறைவில் 82 வேட்பாளா்கள் இருந்த நிலையில் 4 சுயேச்சை வேட்பாளா்கள் மனுவை வியாழக்கிழமை வாபஸ் பெற்ால், அங்கு இறுதியாக 79 போ் போட்டியிடுகின்றனா்.
கரூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் இறுதியாக 166 போ் போட்டியிடுகிறாா்கள். 9 போ் மனுவை திரும்ப பெற்றுள்ளனா்.
இதன்மூலம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில்தான் 79 போ் போட்டியிடுகிறாா்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.