கரூரில் பதுக்கிவைத்திருந்த 240 மதுபாட்டில்கள் பறிமுதல் தையல் தொழிலாளி கைது
கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(47). தையல் தொழிலாளி. இவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, வீட்டுக்குள் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
Advertisement
இவற்றை வாக்குப்பதிவு நாளன்று விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 240 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.