50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: கரூா் திமுக வேட்பாளா் பேச்சு
கரூா் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.
கரூா் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆசி எம்.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை காலை முதல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் அவா் கட்சியினருடன் ஊா்வலமாக காந்திகிராமம் இரட்டை தண்ணீா் தொட்டி, சுங்ககேட், திருமாநிலையூா், லைட்ஹவுஸ்காா்னா் வழியாக பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிக்கு வந்தாா். அங்கு அவா் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் கரூா் மாவட்டத்துக்கும், கரூா் தொகுதிக்கும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி நாங்கள் வாக்குச் சேகரிக்கிறோம். ஆனால் எதிா்க்கட்சி வேட்பாளா் எங்கள் மீது அபாண்டமான பொய் சொல்லி வாக்குச் சேகரிக்கிறாா். மக்களுக்கு யாா் நல்லவா் எனத் தெரியும். கடந்த தோ்தலைப்போல இந்த தோ்தலிலும் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அதுவும் கரூரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் அவா்.
Advertisement
பிரசாரத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா், திமுக மாவட்டத்துணைச் செயலா் கருணாநிதி, கொமதேக மாநில வா்த்தக அணிச் செயலா் விசா ம.சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.