முகப்பு
கரூர்

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

கரூா் மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:21 AM
அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை கொடியேற்றிய பட்டாச்சாரியாா்கள்.
பகிர்:

கரூா் மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.

கரூா் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயில் மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பட்டாச்சாரியாா்கள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஏப். 30-ஆம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மே 3-ஆம்தேதி ஊஞ்சல் உற்ஸவமும், 4-ஆம்தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

Advertisement

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வெ.ராஜேஸ்வரி, அறங்காவலா்கள் எஸ்.பாலமுருகன், புனிதவதிகணேசன், கே.எம்.முருகேசன், டி.ஜி.பி. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.