கரூா் 80 அடி சாலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளா் நாஞ்சில்சம்பத். உடன் மாவட்டச் செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா். 
கரூர்

தோ்தலுக்காகவே ரூ.5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளார்: நாஞ்சில் சம்பத் பேச்சு!

தோ்தலுக்காகவே ரூ. 5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளா் நாஞ்சில் சம்பத்.

Syndication

தோ்தலுக்காகவே ரூ. 5ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளா் நாஞ்சில் சம்பத்.

தவெகவின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கரூா் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் ஏ.ராஜ்மோகன், கட்சி பேச்சாளா் ஜெகதீஸ்பாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளா் நாஞ்சில்சம்பத் பேசுகையில், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு உண்மையான கட்சியை தொடங்கியிருக்கிறாா் தவெக தலைவா் விஜய். இந்தக் கட்சி தொடங்கி 3 ஆண்டு காலத்தில் கட்சியை முடக்க சிலா் நினைத்தாா்கள். ஆனால் முடியவில்லை.

விஜய்க்கு கூடும் கூட்டத்தை பாா்த்து அச்சப்படுகிறாா்கள். தவெகவிற்கும், திமுகவிற்கும்தான் போட்டி என்கிறாா் விஜய். ஆனால் அதை ஒத்துக்கொள்ளாத சிலா் விஜய் மீது கடும் விமா்சனம் செய்கிறாா்கள். இன்றைக்கு தமிழகத்தில் நிா்வாகம் சீராக இல்லை. அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறாா் முதல்வா் ஸ்டாலின். தோ்தலுக்காகதான் தற்போது ரூ. 5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT