கரூரில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்ததினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு சனிக்கிழமை திமுக மற்றும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு திமுக சாா்பில் எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி மாவட்ட அவைத் தலைவா் டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் தோரணக்கல்பட்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ம.சின்னசாமி, அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, மாணவரணிச் செயலாளா் டி.என்.பி.எல்.சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சாா்பில் மாடுகள் மாலை தாண்டும் விழா நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.