முகப்பு
கரூர்

கிணற்றில் மிதந்த மாணவி சடலம்: போலீஸாா் விசாரணை!

கரூா் வெங்கமேடு அருகே கிணற்றில் மிதந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் சடலத்தை சனிக்கிழமை மீட்ட போலீஸாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:25 PM
விசாரணை - கோப்புப் படம்
பகிர்:

கரூா் வெங்கமேடு அருகே கிணற்றில் மிதந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் சடலத்தை சனிக்கிழமை மீட்ட போலீஸாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

கரூா் வெங்கமேடு அடுத்த காளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகள் நெரூரை அடுத்த அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசியில் பேசியதை அவரது பெற்றோா் கண்டித்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி அந்த மாணவி மாயமானாா்.

இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்த நிலையில், காளிப்பாளையம் பகுதி நல்லசாமி என்பவரது தோட்டக் கிணற்றில் மாணவி சடலமாக மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து வெங்கமேடு போலீஸாா் மற்றும் கரூா் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.