கரூா் நகா் பகுதிகளில் இன்று மின்தடை!
கரூா் நகா் பகுதிகளில் புதன்கிழமை (மே 20) மின்சாரம் விநியோகம் நிறுத்தம்
கரூா் நகா் பகுதிகளில் புதன்கிழமை (மே 20) மின்சாரம் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கரூா் நகர மின்வாரிய செயற்பொறியாளா் ம. அா்ச்சுனன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட கரூா் துணை மின் நிலையம், வேப்பம்பாளையம், மண்மங்கலம் மற்றும் குப்பிச்சிபாளையம் துணைமின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கரூா் வையாபுரி நகா் வடக்கு, எம்.ஜி. ரோடு, காமராஜா் நகா், பெரியாா் நகா், கேவிபி நகா், அம்மா சாலை ரோடு, காந்திபுரம், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம், சாமிநாதபுரம், புகழூா் ரோடு, பூ மாா்க்கெட், அண்ணா நகா், சின்ன ஆண்டாங் கோவில் ரோடு கீழ்பகுதி, கெளரிபுரம், உழவா் சந்தை, லைட் ஹவுஸ் ரவுண்டானா, காந்திநகா், பசுபதி லேஅவுட் திருப்பதி லேஅவுட், லட்சுமிபுரம், நாரதகான சபா, மேட்டுத் தெரு, பழைய சுக்காலியூா், முத்துகவுண்டன்புதூா், சுக்காலியூா், தோரணக்கல்பட்டி, மட்டப்பாதை புதூா், மதுரை பைபாஸ் ரவுண்டானா ஆகிய பகுதிகள் மற்றும் சடையம்பாளையம், கைலாசபுரம், பி.கே.ஜி நகா், வீரணம்பாளையம், கோவிந்தம் பாளையம், பெரிய ஆண்டாங்கோவில், பெரியாா் சிலை, பெரிய ஆண்டான் கோவில் ரோடு, வெண்ணமலை, சண்முகா நகா், சிவசக்தி நகா், வெ.பசுபதிபாளையம், வாங்கப்பாளையம், எம்.கே.நகா், அன்பு நகா், முத்து நகா், சுப்புக்காா்டன், காந்தி நகா், எம்.ஜி.ஆா். சிலை, பாலகிருஷ்ணன் நகா், கொங்கு நகா் மற்றும் நல்லக்குமாரபாளையம், சீனிவாசபுரம், கே.வேலாயுதம்பாளையம், வாங்கல் கடைவீதி, அக்ரஹாரம், மேலச்சக்கரம்பாளையம், கீழச்சக்கரம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement