முகப்பு
பெரம்பலூர்

இனாம் அகரத்தில் உழவர் பெருவிழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அகரம் கிராமத்தில் உழவர் பெருவிழா வேளாண் உதவி இயக்குநர் கீதா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 13 மே 2013, 1:34 am IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அகரம் கிராமத்தில் உழவர் பெருவிழா வேளாண் உதவி இயக்குநர் கீதா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர் சி. சின்னசாமி முன்னிலை வகித்தார்.

விழாவில் தோட்டக்கலைத் துறை அலுவலர் ஆனந்தன், தோட்டக்கலைத் துறை  மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறி பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுவது, சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளை பயன்படுத்தும் முறை, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் பண்ணைக் குட்டைகள்  அமைப்பது குறித்தும், வேளாண் அலுவலர் பிரேமா, வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கும் திட்டங்கள், இளநிலை பொறியாளர் அசோக்குமார், வேளாண் கருவிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளும் முறை குறித்தும் விளக்கினர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுடன்  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உதவி வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.