பெரம்பலூர்

ஏப். 18-ல் நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி

DIN

பெரம்பலூர் கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் ஏப். 18 ஆம் தேதி விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவுச்சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் முகாமில் நாட்டுக்கோழி வளர்ப்பு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 04328 - 291459 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களது பெயரை பதிவு செய்யலாம் என, அந்த மையம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT