பெரம்பலூர்

பெரம்பலூரில் சைல்டு லைன் விழிப்புணர்வு

DIN

குழந்தைகள் தினத்தையொட்டி, பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சைல்டு லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  
 மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் சைல்டு லைன் திட்டம் பெரம்பலூரில் உள்ள இந்தோ அறக்கட்டளை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் சைல்டு லைன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நவம்பர் 20 வரை நடத்தப்பட உள்ளன.  
அதன்படி, பெரம்பலூர் புகர் பேருந்து நிலைய வளாகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி (நவம்பர் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் முத்துநகர் ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகள் ஆட்சியருக்கு ராக்கி அணிவித்தனர். தொடர்ந்து, நம்மால் முடியும், குழந்தை திருமணத்தை நிறுத்துவோம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு இயக்கத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.  
 நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஷா, வட்டாட்சியர் த. பாலகிருஷ்ணன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கீதா, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் முஹம்மது உசேன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT