பெரம்பலூர்

கல்வி, வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது பெரம்பலூர்

DIN

கல்வி, வேளாண்மையில் பெரம்பலூர் சிறந்து விளங்குகிறது என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன்.
பெரம்பலூரில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில்  பெரம்பலூர், அரியலூர் மாவட்ட  ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இப்பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடக்கி வைத்தார்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன் பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுபேசியது:
பெரம்பலூர் மாவட்டம் தற்போது பல துறைகளில் முன்னேறிய மாவட்டமாக உயர்ந்துள்ளது. கல்வி, வேளாண்மையில்  மிகச்சிறந்து விளங்குகிறது. ஆக்கப்பூர்வமான செய்திகளை வெளியிடுவதில் செய்தியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர்  இ. மாரியப்பனும்,வேளாண் பொருள்களை மதிப்புப் கூட்டி விற்பனை செய்வது தொடர்பான தொழில்நுட்ப விளக்கம் குறித்து  தஞ்சாவூர் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் டிட்டோ ஆனந்தும்,மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் 
குறித்தும்  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளாவும் பேசினர்.
நிறைவில், சென்னை மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலக இணை இயக்குநர் குருபாபு பலராமன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT