பெரம்பலூர்

நாளை மின் நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

DIN

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 11) நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய செயற்பொறியாளர் மேகலா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில்,  இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர்கள் முன்னிலையில், பெரம்பலூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT