பெரம்பலூர்

ராமகிருஷ்ணா பள்ளியில்  விவேகானந்தர் ஜயந்தி

DIN

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மற்றும் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார். 
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் பேசியது: 
ஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினால், இந்தியா வல்லரசாக மாறிவிடும். மாணவர்கள் தங்களது திறமைகளை அவர்களே கண்டறிய வேண்டும்என்றார் அவர்.  தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
ஏற்பாடுகளை தலைமை ஆசிரியைகள் கோமதி, கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசி, சுஜித்தா, மதுரா, ரேகா, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், தினேஷ், சத்யராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT