பெரம்பலூர்

காளான் வளர்ப்பு, நர்சரி தொழில்நுட்ப இலவச பயிற்சி பெற அழைப்பு

DIN

வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு மற்றும் நர்சரி தொழில்நுட்பப் பயிற்சி இலவசமாக பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
பிரதம மந்திரியின் திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு மற்றும் நர்சரி தொழில்நுட்ப பயிற்சிகள் நவ. 27 முதல் டிச. 28 வரை நடைபெற உள்ளன. இப்பயிற்சியில் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிற்சியிலும் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள இயலும். பயிற்சியின்போது மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். காளான் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ப. விஜயலட்சுமியை 88382-57708 என்னும் எண்ணிலும், நர்சரி தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவனை 97904-91566 என்னும் எண்ணிலும் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என, வேளாண் அறிவியல் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT