பெரம்பலூர்

இலவச மருத்துவ முகாம்:  206 மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்பு

DIN

பாடாலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 206 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்றன.
ஆலத்தூர் வட்டார வளமையத்துக்குள்பட்ட கிராமங்களில் உள்ள பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.  முகாமை மாவட்டக் கல்வி அலுவலர் பெ. அம்பிகாபதி தொடக்கி வைத்தார்.  மொத்தம் 206 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் முகாமில் கலந்து கொண்டனர்.  முகாமில் சக்கர நாற்காலி 1, நடைப்பயிற்சி சாதனம் 4, முடநீக்கியல் சாதனம் 11, மனவளர்ச்சி குறையுடையோருக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் 10, கண் கண்ணாடி 1, சிறப்பு சக்கர நாற்காலி 9, செவித்துணைக் கருவி 7, மூன்று சக்கர வண்டி 1 என மொத்தம் 44 குழந்தைகள் உதவி உபகரணங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 22 பேருக்கு மாற்றுத் திறனுடையோருக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT