பெரம்பலூர்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் போராட்டம் தொடரும்: அரசு மருத்துவர்கள் சங்கம்

DIN

எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தவறினால், மீண்டும் போராட்டத்தை தீவிரமாக தொடருவோம் என்றார் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன். 
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த வாரம் செப்டம்பர் 18 ஆம் தேதி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று 4 வாரங்களுக்கு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். 
மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான ஊதியம், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும். 
சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலும், மக்களின் நலனைக் கருதியும் நம்பிக்கையுடன் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். அதேபோல, அரசாங்கமும் மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு கொடுத்த வாக்குறுதிக்கேற்ப எங்களது கோரிக்கைகளை தீர்க்க முன்வரும் என நம்புகிறோம். அவ்வாறு செய்ய தவறினால், எங்களது போராட்டத்தை சுணக்கமின்றி தீவிரமாக மீண்டும் தொடருவோம்.
பேச்சுவார்த்தைக்காக அரசு அமைத்துள்ள குழுவில் அரசு அதிகாரிகளும், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT