பெரம்பலூர்

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தல்

DIN

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் நகரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அண்மையில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சுப்ரமணியன் அளித்த மனு: நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், நரிக்குறவர் என்னும் குருவிக்கார இன மக்கள் தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் ஏழ்மை நிலையில் இருந்து வருகின்றனர். கல்வியிலும், பொருளாதாரத்திலும் இவர்கள் மிகவும் பின்தங்கி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. 
நரிக்குறவர் என்னும் குருவிக்காரன் என மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி நரிக்குறவர் எனும் குருவிக்கார இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT