பெரம்பலூர்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

DIN

4- ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு முழுவதும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை முதல் (பிப். 20) தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.   
அதன்படி, பெரம்பலுர் மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க கிளை செயலர் ஜெகநாதன் தலைமையில், 74 ஊழியர்களில், 6 பெண்கள் உள்பட 73 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அரியலூரில்... அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் 44 ஊழியர்களில் 41 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தால் பி.எஸ்.என்.எல்.தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT