பெரம்பலூர்

பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

DIN


பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில், அரசு பொதுத்தேர்வு எழுதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அனைத்து தனியார் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் பேசியது: 
மாணவர்கள் தான் இந்த உலகின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். எப்போதும் தன்னால் முடியும் என்ற துணிவோடு, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும். அறிவால் இவ்வுலகை வெல்ல வேண்டும். கல்வியை விருப்பத்தோடு படித்தால் தான், அதில் சாதனை படைக்க முடியும். வாழ்வில் முனைப்புடன் வெற்றிபெற ஒவ்வொரு மாணவனும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர். 
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர் ஐ. ஜெகன் பேசியது: 
எந்த ஒரு செயலையும் விருப்பத்தோடு செய்தால் தான் வெற்றி பெறமுடியும். பண்டைய காலத்திலிருந்தே பெண்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினர். இன்றும், சிறந்து விளங்குகின்றனர். சாதிப்பதற்கு தடை எதுவும் கிடையாது. நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் விண்ணையும் தொடலாம். ஒவ்வொருவரின் வாழ்விலும் முயற்சி, பயிற்சி, தேர்ச்சி, மகிழ்ச்சி, வளர்ச்சி, தொடர்ச்சி எனும் கொள்ளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜசேகர், பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுப்ரமணி, சாரதா மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் எம். சுபலெட்சுமி மற்றும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன் வரவேற்றார். ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் பத்மலால் நன்றி கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT