பெரம்பலூர்

உலக மக்கள் தொகை தினம்: விழிப்புணர்வுப் போட்டிகள்

DIN

திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.  
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான முகாமிற்கு, தலைமை வகித்து கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன் மேலும் பேசியதாவது: 
ஐ.நா. சார்பில் ஜூலை 11 உலக மக்கள் தொகை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1987 ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியதை குறிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய அரசின் ஆயூஷ்மான் பாரத் திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு தலா 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.  
தொடர்ந்து, மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஓலை கலைக்குழுவினர் மூலம் மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்,  விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் வசந்தா, தொற்றா நோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.   கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் டெய்சிராணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT