பெரம்பலூர்

கிராம உதவியாளர்களுக்குவரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்

DIN


கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.  மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.  இயக்க நிறுவனர் செல்வராஜன், மாநில பொதுசெயலர் ஆறுமுகம், மாநில பொருளாளர் மனோகரன், சங்க ஆலோசகர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 
இதில், நீண்ட நாள் கோரிக்கையான கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட (டி பிரிவு ) ஊதியம் முன் தேதியிட்டு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடம் அதிகளவில் உள்ளதால், பணியில் உள்ள கிராம உதவியாளர்களின் பணி உயர்வுக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் எனும் விதியை தளர்த்தி, பணியில் உள்ள தகுதியுடைய கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்கவேண்டும்.  7-ஆவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். 2003-க்குப் பின் பணியில் சேர்ந்துள்ள அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
10 ஆண்டுகள் பணி முடிந்து ஓய்வு பெற்றுள்ள கிராம உதவியாளர்களுக்கு, குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT