பெரம்பலூர்

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் கிராமத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி

DIN

பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் கிராமத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மங்கூன் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாக அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தடையின்றி, முறையான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் பெரம்பலூர்- துறையூர் சாலையில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பாடாலூர் போலீஸார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT