பெரம்பலூர்

வாகன தணிக்கை: பெரம்பலூர், அரியலூரில் ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

DIN


பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை  தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.  
அப்போது, பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் மகன் பெரியசாமியின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1.50 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் (பொ) பி. மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் சரிபார்க்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது. 
அரியலூரில் ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்து 600 பறிமுதல்: அரியலூரை அடுத்த விளாங்குடி ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை இரவு வாகனத்  தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1லட்சத்து 3ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. 
விசாரணையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்தி நகரைச் சேர்ந்த சங்கர் மகன் செல்வகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்துக்கான உரிய ஆணங்கள் இல்லாததால் அதனைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT