பெரம்பலூர்

பறக்கும் படையினரால் ரூ.2.30 லட்சம் பறிமுதல்

DIN

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தேர்தல் பிரிவு  பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம், மக்காச்சோளம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை ரூ. 1.60 லட்சத்தை உரிய ஆவணங்களின் எடுத்துச் சென்றபோது பறிமுதல் செய்தனர். 
பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 2.30 லட்சம் ரொக்கம், குன்னம் சட்டப் பேரவை தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் பி. மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டு , பின்னர்அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT