பெரம்பலூர்

எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

DIN

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு தலைமை வகித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் மாலதி, எய்ட்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்தில் மாணவர்களின் கடமை குறித்து விளக்கி பேசினார். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாடு ஆலோசகர் அபிமணியன், எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய் தடுக்கும் முறைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். 
இதில், உயிர் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
முன்னதாக, செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் வீரபாகு வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் ஹென்றி ரிச்சாட் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT